திங்கள், 11 மே, 2020

வண்ணப்பாடல்!வெள்ளை மனது!
(இடையின வண்ணம்)
.
தய்ய தனன
தய்ய தனன
தய்ய தனன தனனானா! (அரையடிக்கு)
.
வெள்ளை மனதி
   லுள்ள வழகு
   வெல்லும் நினைவு பழந்தேனே!
விள்ளு மொழியி
   லுள்ள கருணை
   வெய்யி லொளிய குளிர்தானே!
.
கள்ளங் கபட
   முள்ள மனது
   கவ்வும் மிருக நிலைதானே!
கள்ளு வடியும்
   முள்ளு மலரும்
   கர்வ மொளிரு மியல்தானே!
.
பிள்ளை நிலையில்
   செய்த தவறு
   பெய்த கடலில் மழைபோலே!
பெய்த நினைவை
   நெய்யுந் தவறு
   பிள்ளை நிலையின் செயல்தானே!
.
கொள்கை நிறைய
   உள்ள மனிதர்
   கொள்ளுந் துணிவு தடம்போலே!
கொள்ளும் வழியில்
   செல்லு முறுதி
   கொள்ள வளரும் வளம்தானே!
.
பாவலர் அருணா செல்வம்
11.05.2020
விள்ளுதல்பேசுதல்

கருத்துகள் இல்லை: