சனி, 2 மே, 2020

அமுதென இன்பம் உதிக்கிறதே!


(வண்ணம் – 12)
.
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த தனத்தனதா!  (அரையடிக்கு)
.
பணியெது மின்றி யுணவையி ழந்து
   பணமெது மின்றி வருக்கிறதே!
   பகையெது மின்றி யுயிரையி ழந்து
   படையெது மின்றி யழிக்கிறதே!

பிணிமுத லுண்டு பசிவயி றின்று
   பிழையறி வின்றி வதைக்கிறதே!
   பெருமுரு கன்த யவினையு ணர்ந்து
   பிழைமன யெம்பி நினைக்கிறதே!

துணிவொடு நின்று தலைமைய றிந்து
   துணையென நம்பி யழைக்கிறதே!
   சுடதென வந்து கொடிதுக ளைந்து
   சுகநல மொன்ற வளிக்கிறதே!

அணியொடொ ளிர்ந்த கதிருமி தந்த
   வனலுமெ ழுந்து கொதிக்கிறதே!
   அமைதிவ னைந்த முருகனி னன்பி
   லமுதென வின்ப முதிக்கிறதே!
.
பாவலர் அருணா செல்வம்
02.05.2020