வியாழன், 30 ஏப்ரல், 2020

கஞ்சிக் காகச் சாகுதே!
(வண்ணம் – 11)
.

தந்தத் தானத் தானனா
   தந்தத் தானத் தானனா!
.
பண்பைக் கூறிப் பாரிலே
   பண்ணைப் பாடிப் போகுதே!
தொண்டைக் காயக் கூவியே
   தொந்திக் காகத் தேடுதே!
பண்டைக் காலச் சாபமோ
   பஞ்சப் பூதத் தீமையோ?
கண்ணுக் கேவிக் கூசவே
   கஞ்சிக் காகச் சாகுதே!
.
பாவலர் அருணா செல்வம்
30.04.2020

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைவருக்கும் ஒரு நாளில்...