திங்கள், 27 ஏப்ரல், 2020

செல்ல காதல் ஊறுமே!(வண்ணம் – 7)
.
தய்ய தான தய்ய தான
தய்ய தான தான்னா !
.
பொய்யி லூட லுள்ள மாது
   புல்லு மோக மூறவே,
வெய்ய னேற வல்ல சூடு
   வெள்ள மாகி யேறவே,
மெய்யி னோடு துவ்வ லேற
   மெல்ல மாக வேசவே,
செய்யு ளோது மில்ல னோடு
   செல்ல கால லூறுமே!
.
பாவலர் அருணா செல்வம்
27.04.2020

பொல்லம்இணைதல்
துவ்வல்அனுபவித்தல்