ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

வேலோடு விரைவாயே!(வண்ணம் – 5)
.
தன்னனன தானான தனதான
    தன்னனன தானான தனதான!
.
விந்தையொடு சீனாவி லுருவாகி,
   விஞ்சுகிற நோயாகி இடமோடி,
வந்தவழி நாடோடு நமதாக,
   வன்பிணியி லேயூறி இனஞ்சாக,
நிந்தைவிழி நீரோடி மனங்காய,
   நெஞ்சுருகி யேயோடி யுனைநாட,
இந்தவிட நோயோட முருகாவுன்
   அந்தம்பெரு வேலோடு விரைவாயே!
.
பாவலர் அருணா செல்வம்
26.04.2020