சனி, 25 ஏப்ரல், 2020

அழகாய் உலகை அருள்வாயே!(வண்ணம்)
.
தனனா தனனா தனதானா
  தனனா தனனா தனதானா!
.
கனநோ யுடனே துயராலே
  கடனே யெனவா ழுகிறோமே!
இனமே பிணியா லழும்போதோ
  எதைநா வினிதா யிடுவேனோ?
மனமே முருகா வெனநானே
  மதியா லழுதே விழைந்தேனே!
அனலா யதைநீ சுடுவாயே
  அழகா யுலகை யருள்வாயே!
.
பாவலர் அருணா செல்வம்
25.04.2020