ஞாயிறு, 29 நவம்பர், 2020

மெலி மெல்லிசைத் தூங்கிசை வண்ணம்!

 


மணவணி விரைந்து வந்து விடும்நேரம்!

தனதன தனன்ன தன்ன தனதன தனன்ன தன்ன
தனதன தனன்ன தன்ன தனதான  (அரையடிக்கு)
. 
வனமழை யறிந்த குன்று குரவின மிகுந்த லைந்து
     வனசனை வனைந்த அம்பு தினம்மோத
  வலமொடு மெலிந்த பெண்ணு மிடமொடு சிறந்த பெண்ணு
     வளமொடு நிறைந்த உன்னை நினைந்தோடும்!
 
மனமிகு நிறைந்து வந்து மதுவென மயங்கி நின்று
     மலரடி உணர்ந்து கொண்ட கனவேளை!
  மறுதலை மறந்து முந்தி மறையுனை மலங்கி யுந்த
     மணவணி விரைந்து வந்து விடும்நேரம்!
 
தினமொரு முதிர்ந்த துன்ப மதுமிக வளர்ந்தெ ரிந்து
     திடமெனு முளங்க டைந்து துயர்வேகும்!
  திருவது வளர்ந்த சின்ன வயிறது குளிர்ந்து நின்று
     திருமணம் நிகழ்ந்த பந்த வழியேகு!
 
சினமதை யடைந்த நெஞ்சு வதைகிற மனங்க ரைந்து
    செறிவொடு நலம்பொ ழிந்து நலம்பாடும்!
திருமுரு கனுன்ப தம்தெ ரிகிறவ கையின்மி குந்த
     தெளிநிலை யறிந்து நன்றி விரைந்தேகும்!
.
பாவலர் அருணா செல்வம்
29.11.2020

கருத்துகள் இல்லை: