சனி, 31 அக்டோபர், 2020

வலி வல்லிசைத் தூங்கிசை வண்ணம்!

 


சுகத்தினைத் தருவாயே!

 
ததத்தனத் ததத்தனத் ததத்தனத் ததத்தனத்
   ததத்தனத் ததத்தனத் தனதான (அரையடிக்கு)
 
கிடைத்ததைப் புசித்திடப் புதுப்புனற் குடித்திடக்
    கெடுப்பதைத் தடுத்திடப் பிணைந்தாயே!
   கிறுக்கிடக் குடத்தினுட் புடைத்துயிர்ப் புதிர்ப்பெனக்
     கிடப்பிடப் பிறப்பமைத் ததுவேனோ!
 
படைப்பெனக் கொடுத்தபொற் கொடிக்கரத் தகைப்பினைப்
    படைத்திடச் சுகத்தினைத் தருவாயே!
 பசிப்பிணிச் சகித்திடத் திகைக்கதைப் புதைக்கநற்
    பதப்பிறப் பதைக்கொடுத் தருள்வாயே!
 
தடைத்தணற் பிடித்துலுக் கிடப்பயத் தடுப்பினைத்
    தகர்த்தொழித் தபொற்றவத் தருள்வேலா!
 தகைத்தசொற் பதத்திடைச் சிறப்பினைக் கதைத்ததைத்
   தலைப்படுத் திடக்குவித் திடுவேனே!
 
புடைத்தெடுத் தொடுத்திடச் சிறப்பினைப் பதித்தெனிற்
    புகுத்திடக் கொடுத்தநற் றமிழோனே!
பொறுப்பெனப் புதைத்தநற் றிறத்தைமத் தகத்தனப்
    புகட்டலைப் பிறழ்த்தியுற் றொழுவேனே!
.
பாவலர் அருணா செல்வம்
01.11.2020

கருத்துகள் இல்லை: