வியாழன், 7 மே, 2020

நோயோடு கூவிப் பணிந்தோமே!(வண்ணம் – 17)
.
தான தான தானான தானத் தனதானா
தான தான தானான தானத் தனதானா!
.
வீர மோடு தீராத கோபக் கனலோடே
   வேத மான வேலோடு போரிட் டொளிர்ந்தாயே!
சூர னோடி மாளாது நீதிப் படியாலே
   சூது வாது நீளாது சேவற் கொடியாமே!
கோர மாக ஊராகி மாளப் பலநாளோ
   கோப மான நோயோடு கூவிப் பணிந்தோமே!
தீர மாக நீயோடி யாடிக் குகவேலால்
   தீமை யோட மீதேற நோயிப் படியாதோ!
.
பாவலர் அருணா செல்வம்
07.05.2020

கருத்துகள் இல்லை: