திங்கள், 4 மே, 2020

குமரன் உனை மறவாதே!(வண்ணம் – 14)
.
தனதனன தனதனன தனதானா
தனதனன தனதனன தனதானா!
.
கருமியென உருவுடைய கொரொனாவோ
   கடுதியென உயிருடலி லிணைவானே!
கிருமியெனு னுடனுறையு மழிவாலே
   கெடுதியொடு புவியுறுது துயராலே!
கருணைவிழி யொளிருகிற நிறைவாலே
   களையெடுகொ டுவினைகளை வடிவேலா!
அருமுலகு மனமொளிர நிலையாலே
   அமுதமொழி குமரனுனை மறவாதே!
.
பாவலர் அருணா செல்வம்
04.05.2020