ஞாயிறு, 17 மே, 2020

இடை அகவல் தூங்கலிசை வண்ணம்உள்ளம் உயர்ந்து ஒளிரும்!
.
தய்யதன தனன தனன
தய்யதன தனன தனதானா

செய்யுதலை யுணர விழைதல்
   செல்வநிலை யடையுஞ் செழிப்பாலே!
பொய்யுழல பகைமை வளர்ந்து
   புல்லரென இகழ்வர் வெறுப்பாலே!
மெய்யுடைய நலங்கள் பறைய
   மெள்ளவரும் குழவி மனம்போலே!
ஒய்யலொடு வளரு மிளமை
   உள்ளமுயர்ந் தொளிரும் கதிர்போலே!
.
பாவலர் அருணா செல்வம்
17.05.2020
ஒய்யல்உதவுதல் கொடுத்தல்