செவ்வாய், 28 ஏப்ரல், 2020

வித்தைப் பாடிப் பணிவோமே!(வண்ணம் – 9)
.
தத்தத் தானத் தனதானா
தத்தத் தானத் தனதானா!
.
ஒற்றுக் கேயொற் றெனநோயா
   யுற்றக் கோரக் கொரொனாவே!
சுற்றித் தேடித் துணிந்தோமே
   சொக்கிப் போயிப் பதுங்காதே!
தொற்றுக் கேதொற் றெனவேலால்
   கொற்றத் தைவிட் டழிவாயே!
வெற்றிக் கேபட் டொளிர்வானை
   வித்தைப் பாடிப் பணிவோமே!
.
பாவலர் அருணா செல்வம்
28.04.2020