வெள்ளி, 24 ஏப்ரல், 2020

கனிவொடு பணிவேனே!(வண்ணம் – 3)
.
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன தனதானா (அரையடிக்கு)
.
சுட்டுச்சுட ரிட்டுச் சுகமொடு
 வட்டக்கள மிட்டுக் கதிரொடு
  சுற்றுச்செய லுற்றுப் பொழிகிற ஒளிபோலே!
சொக்குத்தமி ழிட்டக் கவியொடு
 கற்கப்பெரு மெட்டுச் சுவையொடு
   சுற்றத்தகு மொப்புத் தகைபெரு வடிவேலா!
.
எட்டுத்திக ழுற்றப் பிணியொடு
 பற்றுக்கொடி யற்றுத் துயருற
  எத்துத்தகு வித்தைப் பொழிகிற நிலைபோலே!
எச்சச்செய லிட்டுத் தொடரொடு
 தொட்டுத்தொட விட்டுப் பிணைகிற
  இச்சைச்செய லுற்றுப் புகுகிற பிணியாலே!
.
பட்டுத்துய ருற்றுக் கொடிதென
 ற்றுச்சுய முற்றுச் செயலொடு
  பக்கத்தினி லுற்றப் பதமிட வருவாயே!
பற்றுக்கொரு பச்சைத் தடியென
 நச்சுத்தொழி லுற்றுக் கழிவிடு
  பக்கப்பெரு தொற்றைப் பகையற விரைவாயே!
.
மெட்டுப்புக ழிட்டுக் கலைபல
 கொட்டுச்சர மொத்தக் கவிபல
  விட்டுச்சிற கிட்டுக் கடிதென விரைவேனே!
மெத்தக்கரு கொட்டிப் பெருகிட
 உற்றப்பிணி முற்றிச் செயலற
  முத்துக்கவி சொட்டக் கனிவொடு பணிவேனே!
.
பாவலர் அருணா செல்வம்
24.04.2020
எத்துஏமாற்றுதல்