புதன், 29 ஏப்ரல், 2020

மனமிகும் ஈருடல் அருந்தேனோ!(வண்ணம் – 10)
.
தனந்த தானந் தனதன தானன தனதானா
   தனந்த தானந் தனதன தானன தனதானா!
.
குறைந்த காதல் தனிமையி லேயழ விணைந்தோனே
   குளிர்ந்து நாடும் வழியொடு கூடிட விருந்தானே!
மறைந்து பாடுங் குரலினி லாசையி னழகோசை
   மலர்ந்த மாதின் செவிதனி லேவிழ விழைந்தானே!
நிறைந்த பூவும் நிறமிகு சேலையொ டிருந்தாளோ
   நெகிழ்ந்த காலும் வளையிடு கையொடு விரைந்தாளே!
சிறந்த லூடல் விழியொடு மோதிட மறையாதோ
   செறிந்து வாழும் மனமிகு மீருட லருந்தேனோ!
.
பாவலர் அருணா செல்வம்
29.04.2020

விழைதல்உள்ளோசை, ஆசைப்படுதல், விரும்புதல்
செறிதல்கலத்தல், இணைதல்,

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அடடா...! தமிழ் மேலும் இனிக்கிறது...