செவ்வாய், 28 ஏப்ரல், 2020

வென்று மின்ன நீயெழு!(வண்ணம் – 8)
.
தன்ன தன்ன தானன
தன்ன தன்ன தானன!
.
அன்று கந்த னேயென
   அன்பு கொண்டு பாடிட,
இன்று நொந்த நோயென
   இன்ன லொன்றி வாடிட,
ஒன்றி வந்த தேபிணி
   யுன்ன ருள்ள மோதிட,
வென்ற ழிந்து நீங்கிட
   வென்று மின்ன நீயெழு!
.
பாவலர் அருணா செல்வம்
28.04.2020

கருத்துகள் இல்லை: