(கொரோனா
கண்ணிகள்)
.
தொற்ற ஒற்றிக்கொள்ளும்
தொடர்கதை
யாக்கிவிடும்
பற்று
நிறைந்ததடீ - கொரோனா
பண்பில் அரக்கனடீ!
காற்றில் பறக்காமல்
கண்டவர் தும்பலிட
வேற்றெனப் பார்க்காதடீ – கொரோனா
விரும்பியே சேருமடீ!
கண்ணுக்குக் கிட்டாமல்
கைத்தொட ஒட்டியுடன்
உண்டிடச் சேருமடீ – கொரோனா
உற்றிடக் கொல்லுமடீ!
வாயினுள் சென்றவுடன்
வாழ்ந்திடும் நெஞ்சினுள்ளே
நோயினைக் கூட்டுமடீ – கொரோனா
நுண்ணியக் கிரூமியடீ!
மூச்சுக் குழாயுள்ளே
மூடி அடைத்திட்டுப்
பேச்சை நிறுத்துமடீ – கொரோனா
பின்னிடும் வேகமடீ!
இன்ப உலகில்உள்ள
இனிமை சுகத்தைவிட்டுத்
துன்பமேற் காதடீ – கொரோனா
தொல்லை அழிப்போமடீ!
கைக்கூட்டும் செய்கையினைக்
கண்டதும் விட்டுவிட்டுக்
கைக்கூப்பு வோமடீ – கொரோனா
கலங்கியே ஓடுமடீ!
கொள்ளைப்
பெருநோயால்
கூட்டங்கள்
போடாமல்
தள்ளி
யிருப்போமடீ – கொரோனா
தானாய்
இறக்குமடீ!
அன்பு
நிறைந்திருக்கும்
அரசின்
வழித்தன்னில்
ஒன்று
சேர்வோமடீ – கொரோனா
ஓடிடச்
செய்வோமடீ!
நம்மை
அறிந்துகொண்டு
நன்மை
புரிந்துவிட்டால்
இம்மை
நலம்தானடீ – கொரோனா
இருந்தும்
உயர்வோமடீ!
.
பாவலர்
அருணா செல்வம்
27.03.2020