திங்கள், 18 நவம்பர், 2013

அங்கீகாரம்!!

நட்புறவுகளுக்கு வணக்கம். 

   என்னுடைய “நினைக்க நினைக்க இனிக்கும் தமிழ்“ என்ற கவிதை நூலைத் தமிழக அரசு பொதுவுடமையாக அங்கீகரித்துள்ளது.
   இதனால் இனி, அனைத்து அரசு பொது நூல் நிலையங்களிலும் எனது இந்தக் கவிதை நூல் இருக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
அருணா செல்வம்.
---------------------------------------------------------------
அங்கீகாரம்!! (நிகழ்வு)


    இங்கிலாந்தை ஆண்ட மன்னர் மூன்றாம் ஜார்ஜ் ஒரு சமயம் மாறுவேடம் பூண்டு நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்.
   அது பகல் நேரம்.
   ஜார்ஜ் கோதுமை வயல்கள் நிறைந்த ஒரு பகுதிக்கு வந்தார்.
   ஒரு வயலில் ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தாள்.
   ஜார்ஜ் ஆச்சர்யப்பட்டுக் கொண்டே அந்தப் பெண்ணிடம் வந்தார்.
   “பெண்ணே.. நீ மட்டும் இங்கு தனியாக வேலை செய்து கொண்டிருக்கிறாயே. மற்றவர்கள் எல்லாம் எங்கே?“ என்று கேட்டார்.
   “மன்னர் பவனி வருகிறாராம். அதைப்பார்க்க எல்லோரும் சென்றிருக்கிறார்கள்“ என்றாள் அந்தப் பெண்.
   “நீ ஏன் செல்லவில்லை?“ என்று கேட்டார் ஜார்ஜ்.
   “நான் வேடிக்கை பார்க்கச் சென்றால் எனக்குக் கூலி கிடைக்குமா? எனக்கு வேலைதான் முக்கியம். வேடிக்கை அல்ல.“ என்றாள் அந்தப்பெண்.
   அவளது கடமை உணர்வையும் உழைப்பையும் கண்டு மனம் மகிழ்ந்த ஜார்ஜ் மன்னர், சில தங்க நாணயங்களை அவளிடம் கொடுத்தார்.
   அந்தப் பெண் திகைத்து அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
   “மற்றவர்கள் இங்கு வந்தபின் அவர்களிடம் சொல்... நீங்கள் எல்லோரும் மன்னரைப் பார்க்கப் போய் விட்டீர்கள். ஆனால் மன்னரோ இங்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுச் சென்றார் என்று“
   சொல்லிவிட்டு ஜார்ஜ் மன்னர் விரைந்து செல்ல...
   இது உண்மைதானா என்று நம்பமுடியாதபடி அந்தப் பெண்மணி, தன் கையிலிருந்த தங்க நாணயங்களையும் வேகமாகச் சென்று கொண்டிருந்த ஜார்ஜ் மன்னரையும் மாறி மாறி பார்த்தாள்.
   உண்மை தான். என்பதை அவள் கையிலிருந்த தங்க நாணயங்கள் உணர்த்தியது.
   அவள் வாய்ச்சொல்லை மற்றவர்கள் நம்பவில்லை என்றாலும் இந்த நாணயங்கள் அவர்களை நம்பவைக்கும் என்பதை எண்ணி மகிழ்ந்தாள்.

(படித்ததில் பிடித்தது)
---------------------------------------------------


43 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சி! இது உங்கள் உழைப்புக்கு கிடைத்த மகுடம்.
    ஒரு நூலை அரசு--எந்த அரசாக இருந்தாலும், பொது நூல் நிலையங்களில் வைப்பது என்பது சாதாரண காரியமில்லை! அதுவும் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் உங்களுக்கு!
    இது உங்கள் தமிழுக்கு கிடைத்த மரியாதை.

    எல்லோரும் இந்த நல்ல செய்தியை அறிந்து கொள்ளவேண்டும் என்று எனது தமிழ்மணம் பிளஸ் + 1 வோட்டு...போ!!

    போ! என்றால்...வோட்டு போட்டாச்சு; அதுவும் பிளஸ் +1 வோட்டு என்று தான் அர்த்தம்.

    யாருக்கும் நான் மைனஸ் வோட்டு போடுவதில்லை என்பதை நினைவில் கொள்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நம்பள்கி.

      ஓட்டிற்கும் மிக்க நன்றி. (நானும் யாருக்கும் மைனஸ் ஓட்டு போட்டதில்லை)

      நீக்கு
  2. (படித்ததில் பிடித்தது) அருமை..!

    //“நினைக்க நினைக்க இனிக்கும் தமிழ்“ என்ற கவிதை நூலைத் தமிழக அரசு பொதுவுடமையாக அங்கீகரித்துள்ளது.//

    இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  3. படித்ததில் பிடித்தது மிகவும் அருமை சகோதரி... தமிழக அரசு பொதுவுடமையாக அங்கீகரித்துள்ளதற்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. என்னுடைய “நினைக்க நினைக்க இனிக்கும் தமிழ்“ என்ற கவிதை நூலைத் தமிழக அரசு பொதுவுடமையாக அங்கீகரித்துள்ளது. //தலைப்பிற்காகவே ஆக்கலாம் .அவ்வளவு அருமை . வாழ்த்துக்கள் சகோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  5. தங்கள் கவிதை நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது
    பதிவர்கள் அனைவருக்கும்
    மிக்க மகிழ்வு தரும் செய்தி
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. ம்ம்ம்ம் உழைப்புக்கு எப்பொழுதும் அங்கீகாரம் தேவை தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவைதான்!
      அது தான் ஊக்க மருந்தாக இருக்கிறது .

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி காயத்ரி.

      நீக்கு
  7. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  8. மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஜனா ஐயா.

      நீக்கு
  9. இந்த மேன்மைதரும் செய்தி ஒன்றே போதும்
    உங்கள் கொடி எவ்வளவு உயரத்தில் பறக்கிறதென்று...

    உங்களின் உன்னத வளர்ச்சிக்கும் திறமைக்கும்
    கிடைத்த பெரும் பரிசு! மதிப்பு!

    உளமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள் தோழி!

    மேலும் மேலும் இன்னும் பல சாதனைகளைக் கண்டிடவும் வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்து என்னை மேலும் ஊக்குவிக்கிறது.

      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  11. மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் அவர்களே.

      நீக்கு
  12. மிக்க மகிழ்ச்சி! இது உங்கள் உழைப்புக்கு கிடைத்த அங்கிகாரம். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இந்த செய்தி பதிவர்கள் அனைவருக்கும் மிகவும் சந்தோஷம் தரும் செய்தி.. ஆமாம் இப்படி அறிவிப்பு செஞ்சுட்டு ஒளிஞ்சுக்காதீங்க... எங்க ட்ரீட்??????? தித்திக்கும் பிரான்ஸ் நாட்டு சுவிட்டை ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கும் அப்பாவி மதுரைத்தமிழன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ட்ரீட் தானே....
      நிச்சயம் கொடுக்கிறேன்.

      வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  13. கேட்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது தோழி அருணா .வாழ்த்துக்கள்
    தங்களின் முயற்சி தொடரட்டும் அதனால் மென்மேலும் தங்கள்
    நூல்கள் இன்று போல் என்றென்றும் சிறந்த இடத்தில் நிலைக்கட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் வாழ்த்து பலிக்கட்டும்.

      வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  14. வாழ்த்துகள் அருணா!உங்கள் பணி தொடரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மதுரை சொக்கன் ஐயா.

      நீக்கு
  15. வணக்கம்
    தமிழக அரசு பொதுவுடமையாக அங்கீகரித்துள்ளதற்கு வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  16. // என்னுடைய “நினைக்க நினைக்க இனிக்கும் தமிழ்“ என்ற கவிதை நூலைத் தமிழக அரசு பொதுவுடமையாக அங்கீகரித்துள்ளது. //

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  17. மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ்ப் பணிதொடரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  18. தங்களின் கவிதை தொகுப்பு பொதுவுடமை ஆக்கப்பட்டது மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்! படித்ததில் பிடித்தது சிறப்பான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  19. மனமார்ந்த வாழ்த்துகள் அருணா செல்வம்..... தகவல் மகிழ்ச்சி தந்தது!

    படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  20. வணக்கம்

    தங்கள் முயற்சிக்கும் ,திறமைக்கும் கிடைத்த பரிசு

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீராளன் அவர்களே.

      நீக்கு
  21. எழுதுவதே இன்பம் தரும். அந்த எழுத்துக்குப் பாராட்டு என்றால் இன்னும் இன்பம். பாராட்டே அங்கீகார வடிபில் , அதுவும் அரசி அங்கீகார வடிவில் வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி. பாராட்டுக்கள் அருணா செல்வம்

    பதிலளிநீக்கு