வெள்ளி, 11 அக்டோபர், 2013

சத்தியத்தை மீறலாமா? (நகைச்சுவை)




   “ஏன்டி காலையிலிருந்து மூஞ்சை உம்முன்னு வச்சிக்கினு எதுவுமே பேசமாட்டேங்கிற. என்னவாச்சி?“ மனைவியின் முகவாயைத் தன் கையால் தூக்கிக் கேட்டான் கணவன்.
   “நீங்க இனிமே குடிக்க மாட்டேன்னு சத்தியம் செய்யுங்கள். அப்போத்தான் நான் உங்களோட பேசுவேன்.“ கையைத் தட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் மனைவி.
   “ஓ... இது தான் உன் கோபமா...? சரி, நாளையிலேர்ந்து குடிக்கமாட்டேன். இது சத்தியம். போதுமா...?“ என்ற கணவனைப் பாசத்துடன் பார்த்தாள்.

   மறுநாள் இரவும் குடித்துவிட்டு வந்தவனிடம், “நாளையிலேர்ந்து குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு இன்னைக்கும் இப்படி குடிச்சிட்டு வந்திருக்கிறீங்களே.... ஐயோ.. இந்த மாதிரி பொய் சத்தியம் பண்ணலாமா...? குடும்பத்துல கேடு வந்திடுமே...“ என்று சொல்லி அழுதாள் மனைவி.
   “அடியேய்... அழுகைய நிறுத்து. நான் நாளையிலேர்ந்து தான் குடிக்கமாட்டேன்னு சத்தியம் பண்ணினேன். அதனால நாளையிலேர்ந்து குடிக்க மாட்டேன். நான் ஒன்னும் சத்தியத்தை மீறலை. நம்ம குடும்பத்தக்கு ஒன்னும் ஆகாதுடி. அழதே...“ என்று அவன் சொன்னதில் ஆறுதல் அடைந்தாளாம் அவனின் மனைவி.

உண்மையில் சத்தியத்தை மீறலாமா...? ஒரு சீன கதை இதோ.

   “கன்ஃப்யுஷியஸ்“ என்ற சீன தந்துவ ஞானி, அவர் நாட்டிலிருந்த அரசியல் பகை காரணமாக, தன் சீடர்களுடன் ரகசியமாக புறப்பட்டு வேற்று நாட்டிற்கு போய்க்கொண்டிருந்தார்.
   அப்பொழுது உள்ளுர் படைஅதிகாரிகள் வந்து அவரை மடக்கி “நீங்கள் வெளி நாட்டுக்கு போய் தங்கிவிட மாட்டேன் என்று சத்தியம் பண்ணி வார்த்தை கொடுங்கள். அப்போது தான் நீங்கள் எங்கே செல்லவும் அனுமதிப்போம்“ என்றார்கள்.
   ஞானியும், “சரி“ என்று சத்திய வார்த்தைத் கொடுத்துவிட்டு, தன் சீடர்களுடன் வெளிநாட்டிற்குப் போய் தங்கிவிட்டார்.
   இந்தச் செயல் அவரின் சீடர்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. “நம்ம குரு சத்தியத்தை மீறிவிட்டாரே!“ என்று கிசுகிசுத்தார்கள்.
   அதைக்கண்ட ஞானி அவர்களை அழைத்து, “நாமாக மனமுவந்து சத்திய வார்த்தை கொடுத்தால் தான் அதை மீறக்கூடாது. காப்பாத்தணும். கட்டாயப்படுத்தி சத்தியம் வாங்கினால், அதை மீறுவது தவறில்லை“ என்றாராம்.

   ஆகவே, சத்திய வார்த்தை என்பது, தன்மனச் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டதாகவே இருக்க வேண்டும். அடுத்தவர் கேட்பதற்கெல்லாம் வாக்கு கொடுப்பது சத்திய வாக்கு ஆகாது.

அருணா செல்வம்.
12.10.2013

13 கருத்துகள்:

  1. அந்த குடிகாரர் தானே சத்தியமாக திருந்த வேண்டும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  2. இதுவரைப் படித்திராத புதிய கதை...புதிய கோணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

      நீக்கு
  3. அவர் சொன்னது நல்லவர்களுக்குத் தானே. " “நாமாக மனமுவந்து சத்திய வார்த்தை கொடுத்தால் தான் அதை மீறக்கூடாது. காப்பாத்தணும். கட்டாயப்படுத்தி சத்தியம் வாங்கினால், அதை மீறுவது தவறில்லை“" என்பதை குடிகாரர்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளக்கூடாதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகவே, குடித்துவிட்டு சொல்வதை எல்லாம் ஒரு வாக்காக எடுத்துக்கொள்ள கூடாது என்பதைத்தான் சொன்னேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. அடுத்தவர் கேட்பதற்கு கொடுப்பதெல்லாம் சத்தியவாக்கு ஆகாது! நல்ல தீர்ப்புதான்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  5. //அடுத்தவர் கேட்பதற்கெல்லாம் வாக்கு கொடுப்பது சத்திய வாக்கு ஆகாது.//

    ஆகா!......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  6. சிந்திக்க வைக்கும் நகைச்சுவை...

    பதிலளிநீக்கு