வியாழன், 16 மே, 2013

பக்கத்து வீட்டுக் கோழி!! (நிமிடக்கதை)





   “என்னங்க... இந்தப்பக்கத்து வீட்டுக் கோழியோட தொல்லை தாங்க முடியலைங்க. நீங்க போய் கொஞ்சம் சொல்லுங்களேன்“ என்றாள் ரேவதி தோட்டத்தில் நின்றுகொண்டு கன்னத்தில் கைவைத்தபடி.
   “ஏன் இப்போ என்னவாச்சி?“ சரவணன் கேட்டார்.
   “பாருங்க... நான் தோட்டத்து மண்ணுல போடுற கீதை விதை எல்லாத்தையும் சீண்டி சீண்டி சாப்பிட்டு போவுது. நானும் எத்தனை முறைதான் விதை போடுறது?“
   “சரி... நீயே போய் சொல்லிட்டு வர்றது தானே..“
   “சொன்னேங்க... அதுக்கு அவ திமிரா சொல்லுறா... நான் என்ன செய்ய முடியும்? நீ.... கோழிக்கிட்ட சொல்லிட்டு போன்னு சொன்னாங்க“ என்றாள் கோபமாக.
   “நீ சொல்லியே அவங்க இப்படி பேசினாங்க என்றால்... நான் போய் சொல்லி கேக்கவா போறாங்க. நீ கீரை வளக்கிறதெல்லாம் விட்டுத் தள்ளு.“ என்றார் சரவணன்.
   “என்ன நீங்க இப்படி பேசுறீங்க? நீங்க போய் கொஞ்சம் சத்தமா சொல்லிட்டு வாங்க. அப்பத்தான் கேட்பாங்க.“ என்றாள்.
   “பக்கத்து வீட்டுக் காரங்க கிட்டயெல்லாம் சத்தமா சண்டையெல்லாம் போடக் கூடாது. நான் இதுக்கு ஒரு வழிசெய்யிறேன்“ என்று மெதுவாக சொல்லிவிட்டு வெளியேறினார்.
    ரேவதி கோழி சீண்டிவிட்டுப் போன இடத்தைக் கவலையுடன் பார்த்துவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.

   வெளியே போன சரவணன் இரண்டு முட்டையுடன் வீட்டினுள் நுழைந்தார். “எதுக்குங்க திடீர்ன்னு நாட்டு கோழி முட்டை வாங்கினு வந்திருக்கிறீங்க...? உங்களுக்குப் பிடிக்காதே...“ என்றாள் ரேவதி.
   “ம்.... பிடிக்காது தான். நீயும் இதை இப்போ சமைச்சிடாதே....“ என்று சொல்லிவிட்டு பிரிட்ஜியில் வைத்துவிட்டு படுத்தார்.
  
மறுநாள் காலை.
    “ரேவதி... இங்க வந்து பாரேன். பக்கத்து வீட்டு கோழி நம்ம மண்ணைச் சீண்டிவிட்டு அதுல முட்டை போட்டுவிட்டு போய் இருக்கிறது....“ என்றார் சத்தமாக.
    ரேவதி ஒன்றும் புரியாமல் கணவனைப் பார்த்தாள். அவர் எதுவும் பேசதே என்று சைகையுடன் அவளை உள்ளழைத்துச் சென்றார்.
   மறுநாளும் அதே போல ஒரு முட்டையைப் புதைத்துவிட்டு மீண்டும் தோண்டி எடுத்து.... “ரேவதி... நேத்து மாதிரியே இன்னைக்கும் பக்கத்து வீட்டு கோழி ஒரு முட்டையை போட்டுவிட்டு போய் இருக்கிறது. இந்தா.. கொண்டு போய் பிரிஜியில் வை“ என்றார் மேலும் சத்தமாக.

மூன்றாம் நாளிலிருந்து கோழி வரவே இல்லை!

அருணா செல்வம்.
16.05.2013
   

41 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பழனி.கந்தசாமி ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. பக்கத்துவீட்டைப் பகைத்துக்கொள்ளாமல் மனைவியின் பிரச்சனையை வெகு சாமர்த்தியமாய் இரண்டு முட்டைகளின் உதவியோடு தீர்த்துவைத்த சரவணனின் சமயோசிதம் பாராட்டவைத்தது. சொந்த அனுபவமோ? ரசித்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவமெல்லாம் இல்லைங்க. சும்மா ஒரு யோசனைதான்!

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.

      நீக்கு
  4. பக்கத்து வீட்டுக் கோழி!
    பரவாயில்லியே! நம்ம குறும்படத்திற்கு ஒரு அட்டகாசமான டைட்டில் (பெயர்) கிடைத்துடுது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படமெல்லாம் தயாரிக்கிறீர்களா....?
      வாழ்த்துக்கள்.

      என் டைட்டிலை எடுத்துக்கொள்வதில் ஒன்றும் எனக்கு ஆட்சேபனை இல்லை. என்ன... “பக்கத்து வீட்டுக் கொழியைக்“ கோழியாகத் தான் காட்டுவீர்களா என்று யோசிக்கத் தோன்றுகிறது.
      நன்றி நம்பள்கி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  6. முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்
    என்று சொல்வது இதைத்தான்...
    ==
    கதை நல்லா இருக்குது சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இந்த கருத்தைக் கதையின் முடிவில் எழுதலாம் என்றே நினைத்தேன். பிறகு யோசித்தேன். அவரவர்களின் கருத்தை அவரவர்களே உணர்ந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மகி அண்ணா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  9. பிறருக்கு தொந்தரவு அளிப்பதில் சிலருக்கு இன்பமாக இருக்கும். தாம் கொடுக்கும் அந்த தொந்தரவிலும் பிறருக்கு ஏதேனும் ஆதாயம் கிடைப்பதாகத் அந்த சிலருக்குத் தோன்றிவிட்டால், அதைக்கண்டு அவர்கள் மனம் குமுறும்.

    சின்னக்கதையில் மிகப்பெரியதோர் அறிவுரை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா. நானும் ஒருசிலரைப் பார்த்திருக்கிறேன். ஒரு சமயம் அதன் வெளிபாடாக கூட இந்த கதை அமைந்திருக்கலாம்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் என் கதையைப் படித்துச் சிரித்ததற்கும்
      மிக்க நன்றி ஜெய்தேவ் ஐயா.

      நீக்கு
  11. சிறிய கதையாயினும் அருமையான கதை.ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  12. அடடா... எப்படியெல்லாம் இப்படிக் கற்பனை கரைபுரண்டோடுகிறதோ உங்களுக்கு...
    ஆச்சரியமாயும் சற்றுப் பொ..றா..ம்ம் ஆகவும் இருக்கெனக்கு.
    ஆமா இதற்காகவே கற்பனை பெருக்கெடுக்கிறதுக்கென்னே ஏதாகிலும் பிரத்தியேகமாக வழிகள், உணவுமுறை இப்படி உண்டோ?.. பின்னிடுறீங்கன்னேன்...:))).

    அருமையான குறுங்கதை. குறுகத்தறித்த குறள்போல மிகமிகக் குறைவா எழுதி பெரிய விடயங்களை அற்புதமாய்ப் பதியவைகின்றீர்கள்.
    மிகவே ரசித்தேன். ஆமா இதுக்கென்னே நல்ல படங்கள் சேர்க்கின்றீர்களே... எப்படித்தான் கண்டுபிடிக்கின்றீர்களோ???
    இல்லை நீங்களே வரைஞ்சதோ? அருமையாகப் பொருந்தியுள்ளது. வாழ்த்துக்கள் தோழி!

    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தோழி.

      “ஏதாகிலும் பிரத்தியேகமாக வழிகள், உணவுமுறை இப்படி உண்டோ?.. “

      உண்டு களித்தேன் உணர்வுகளை! இங்கதைக்
      கொண்டே அளித்தேன் குறைவாக! - நண்பர்கள்
      கண்டு கருத்திட காரணமோ என்றும்நான்
      உண்ட தமிழின் உயர்வு!

      என் வலையில் இருக்கும் படங்களெல்லாம்
      இணையத்தில் இருந்து எடுத்தது (சுட்டது) தான்.

      சில நேரங்களில் நல்ல படங்கள் கிடைத்தால்
      அதற்கேற்றார் போல் கற்பனையில் எழுதுவதும் உண்டு.
      சில நேரம் பதிவை எழுதிவிட்டு படத்தைத் தேடுவதும் உண்டு.

      தங்களின் இனிய வரவிற்கும் கருத்திற்கும்
      அழகிய கேள்விகளுக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.


      நீக்கு
  13. சண்டையையும் தவிர்த்தாச்சு
    சங்கடமும் தவிர்த்தாச்சு
    அருமையான கதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மாதேவி தோழி.

      நீக்கு
  15. முள்ளை முள்ளால் எடுப்பது போல அருமையான ஐடியா செய்து துன்பம் தவிர்த்தார்! அருமையான கதை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  16. (புத்தியில்) வல்லவருக்கு முட்டையும் ஆயுதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் அவர்களே... (முட்டையில் ஆசிட் ஊற்றிக் கூட அடிக்கலாமாம்...)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  17. கீதை நல்ல சிந்தனைகளை நம்முள்ள விதைக்கும். இங்க கீதையையே விதைக்கிறாங்களா? (ஹி... ஹி... சும்மா டமாசுக்கு!) ஒரு சின்ன, சாமர்த்தியமான ஐடியாவினால சச்சரவில்லாம பிரச்னையத் தீர்த்து வெச்ச அந்தக் கணவரோட சாமர்த்தியத்துக்கு ஒரு ஓ! போடலாம். நறுக் கதை அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலகணேஷ் ஐயா.

      உங்களின் பின்னோட்டத்தைப் படித்ததும் முதலில் எனக்கு
      ஒன்றுமே புரியவில்லை. கீதைக்கும் இந்தக் கதைக்கும் என்ன
      சம்மந்தம் என்று குழம்பினேன். பிறகு தெளிந்து கதையைத் திரும்பவும் படிக்கும் பொழுது தான் “கீரை“ என்பதை “கீதை“ என்று கவனிக்காமல் எழுதி இருந்தது புரிந்தது. அதை இவ்வளவு
      நாசுக்காக சொல்லிய விதம்... அருமை. மிக்க நன்றி.

      உங்களனி் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.

      நீக்கு
  18. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது பகிர்வு வாழ்த்துக்கள் தோழி !

    பதிலளிநீக்கு
  19. அருமை அருணா அவர்களே... நல்ல சிந்தனை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அகல் அவர்களே.

      நீக்கு